சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வெற்றிடமாக உள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் இன்று புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
