க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள் இம்முறை,பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானதாக தெரிவிக்கப்படும் சந்தேகம் விசாரணைக்கு வரவுள்ளது.இது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் பரீட்சைத் திணைக்களம் முறையிட்டுள்ளது.பரீட்சைத் திணைக்கள பிரதி ஆணையாளர் கடந்த வாரம் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர்தரப் பொருளாதார வினாத்தாள் வெளியானதாக சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் பதிவாகியிருந்தன.இந்த சந்தேகத்தை தௌிவுபடுத்தும் பொறுப்பு பரீட்சைகள் திணக்களத்துக்கு உள்ளது.
இந்த நியதியின் அடிப்படையிலேயே,பரீட்சைகள் ஆணையாளர் இது பற்றி விசாரிக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார். எனினும்,ஏற்கெனவே நடத்தப்பட்டிருந்த உள்ளக விசாரணைகளில், இத்தகைய சம்பவம் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைத்திருக்கவில்லையென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் முறையான விசாரணை நடத்தி நம்பகத் தன்மையை மக்களுக்கு அறிவிக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராகி வருகிறது.
