🔴 VIDEO தந்தையின் கொடூர செயலால் தீயில் கருகிய குடும்பம்!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபரொருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணும் உயிரிழந்தார்.

குடும்பத் தகராறு காரணமாக இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிகாரமடுவ பிரதேசத்தில் பெற்றோல் ஊற்றி நபொருவர் தனது வீட்டை தீ வைத்துள்ளார்.

தீயினால், தீயை வைத்த 43 வயதுடைய நபரும் அவரது 13 வயது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீயில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தால் படுகாயமடைந்திருந்த பெண்ணும் தற்போது உயிரிழந்தார்.

தந்தை வீட்டுக்கு தீ வைக்கும் சந்தர்ப்பத்தில் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அறிந்ததும் மகன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்றச் சென்ற 20 வயதுடைய மகனும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை தாக்கி வந்துள்ளதாகவும், அவர்களுக்கு இடையில் இருந்த தகராறு காரணமாக பல சந்தர்ப்பங்களில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்