பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

கல்வலயாய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் கும்பல் ஒன்று மகாஓயா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகாஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பொல்லெபெத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது தொடர்பில் மகாஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!