🔴 VIDEO 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்றைய தினம் (03) காலை 9.30 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஷிரந்தி ராஜபக்ஷ மேலும் இருவருடன் இணைந்து கூட்டு வங்கிக் கணக்காகப் பேணி வந்த “சிறிலிய” (Siriliya) கணக்கின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஷிரந்தி ராஜபக்ஷ கடந்த ஜனவரி 27ஆம் திகதியும் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் அவர் சமூகமளிக்கவில்லை என்பதுடன் வேறொரு தினத்தைக் கோரியிருந்தார். அதற்கமையவே அவர் இன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தார்.

ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறிய போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவான பெருமளவிலானோர் அங்கு குழுமியிருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்