பொலிஸாரின் உத்தரவை மீறிச்சென்ற வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று (09) பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

அம்பலாங்கொடை திசை நோக்கிப் பயணித்த சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றினைப் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நிறுத்துமாறு சைகை செய்தபோது, அந்த லொறி பொலிஸாரின் கட்டளையை மீறி நிறுத்தாமல் முன்னோக்கிச் சென்றுள்ளது.

இதன் போது பொலிஸ் அதிகாரிகள் லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயற்சித்த வேளையில், லொறி தொடர்ந்து தப்பியோட முயன்றதால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த லொறியைப் பரிசோதித்த போது, அதில் 10 பசுக்களும் 4 எருமை மாடுகளும் இருந்துள்ளதுடன், அவற்றில் ஒரு பசு கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

லொறியில் இருந்த இரு சந்தேகநபர்களை 5,200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் லொறியுடன் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரஸ்ஸ மற்றும் பேருவளை பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடையவர்களாவர்.

லொறியின் சாரதி மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கு அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்