மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டம்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ் 6 நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக மாத்திரம் மாதம் ஒன்றுக்கு 180 இலட்சம் ரூபா செலவிடப்படும். 15 இலட்சம் ரூபா செலவை “அதிகம்” எனக் கூறிவிட்டு, 180 இலட்சம் ரூபா செலவை ஏற்க அரசாங்கம் தயாராவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மின்சார சபையை இரத்து செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கு அமைச்சின் செயலாளர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை அரசாங்கம் தன்னிச்சையாக முன்னெடுத்தால், சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து ஒட்டுமொத்த மின்சார சபை ஊழியர்களும் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!