அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அதில் அரசாங்கம் 4 சதவீத வட்டியை ஏற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு வகைகளில் வீடுகள், பாதைகளை நிர்மாணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வழங்க 96 000 மில்லியன் ஒதுக்கியுள்ளோம். கிராமிய இளைஞர்களுக்கு தமது திட்டங்களை முன்வைத்து பணம் பெறலாம்.

வங்கிகளின் ஊடாக கைத்தொழில்களுக்கு கடன் வழங்க ஆலோசனை வழங்கியுள்ளோம். 73 ஆயிரம் பேரை அரச சேவைக்கு உள்வாங்க அனுமதி கிடைத்துள்ளது. 23 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொலிஸிற்கு 10000 பேரை இணைத்துக்கொள்ள இருக்கிறோம்.

இந்த வகையில் பொருளாதார வெற்றியை கிராமங்கள் வரை விஸ்தரிக்க பல்வேறு திட்டங்களை தயாரித்து வருகிறோம்.

டித்வா சூறாவளியின் போது வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. டித்வாவிற்காக மேலும் 50000 கோடி ரூபா ஒதுக்கினோம். இழப்பீடு வழங்கும் தொகைகளை அதிகரித்தோம். இதற்காக பணம் அச்சிட வில்லை.

திறைசேரியில் இருக்கும் நிதியே பயன்படுத்தப்பட்டன.திறைசேரிக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து பணத்தையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வறுமையை ஒழிக்க வேண்டும். வறுமை என்பது சமூக அவலமாகும். பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். இந்த வருட சம்பள அதிகரிப்பிற்கு 11 000 கோடி ஒதுக்கியுள்ளோம்.

இந்த சமூக அவல நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த விடயத்தில் பூரண அளிப்புப் பத்திரம் வழங்குவதை ஒரு தனித்துவமான வாய்ப்பாகக் குறிப்பிடலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!