உதவிக்கு வந்த அமெரிக்க விமானங்களை சுட்டுவீழ்த்தியது குவைட்!

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் “தவறுதலாகச் சுடப்பட்டு” (Friendly Fire) வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் 01(CENTCOM) தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அந்த விமானங்களில் இருந்த ஆறு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளதாக ‘X’ தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை குவைட் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் குவைட் பாதுகாப்புப் படைகள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

குறித்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி