அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்தது: ஈரான் வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை” நடத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்த கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக நிராகரித்துள்ளது.

உலக சந்தையில் அதிகரித்து வரும் எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்கும், அமெரிக்க இராணுவத் திட்டங்களுக்குக் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்குமே ட்ரம்ப் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக ஈரான் அரசாங்கத்துடன் இணைந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்திய பதற்றத்தைத் தணிப்பதற்காக சில நாடுகளினால் முன்வைக்கப்பட்ட சில “ஆலோசனைகள்” மாத்திரமே தற்போது உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ‘மெஹ்ர்’ (Mehr) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

“இந்த யுத்தத்தைத் தொடங்கிய தரப்பினர் நாங்கள் அல்ல. எனவே, இந்த அனைத்து கோரிக்கைகளும் ஆலோசனைகளும் வொஷிங்டனை நோக்கியே முன்வைக்கப்பட வேண்டும்” என ஈரான் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!