எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா ‘ஒற்றை மற்றும் இரட்டை’ இலக்க முறைமை?

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை – ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எதிர்வரும் மே மாதம் இறுதி வரை நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

எரிபொருள் கொள்வனவு தொடர்பான அத்தியாவசிய டெண்டர்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரங்களில் நாட்டில் எவ்வித தடையுமின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை – ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எரிபொருள் நிலையங்களில் வாகன வரிசைகள் தொடர்ந்து குறைந்து, நிலைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் பட்சத்தில், இந்த விநியோகக் கட்டுப்பாட்டு முறைமையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்