மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!

முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்துவிட்டு, உங்களால் இயன்ற ஆதரவை வழங்குங்கள் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். மின்வெட்டை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்துவிட்டு, உங்களால் இயன்ற ஆதரவை வழங்குங்கள். அந்த நேரத்தில்தான் மின்சார உற்பத்திக்கு அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

பகல் நேரங்களில் பிரச்சினை இல்லை. இரவில் பிரஜைகளாக நாம் அந்த ஆதரவை வழங்க வேண்டும். ஏனென்றால், அதன் சுமை இறுதியில் நமக்கும் மக்களுக்கும் தான் வந்து சேரும். மக்களுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

பிராந்திய ரீதியாகப் பார்த்தாலும் நாம் இதனை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்திலும் நாம் அதைத் தொடர வேண்டும். அதற்காக எரிபொருளைக் கொள்வனவு செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அரசாங்கம் என்ற ரீதியில் நான் பொறுப்புடன் கூறுகிறேன், பலர் மின்வெட்டைச் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அந்த எண்ணம் இல்லை. எப்படியாவது மின்வெட்டைத் தவிர்க்கவே முயற்சிக்கிறோம். மே மாதம் வரை அனைத்து நுகர்வுகளுக்கும் தேவையான எரிபொருள் எங்களிடம் உள்ளது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். .

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்