இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே கருத்துத் தெரிவிக்கையில்:

தற்போது இலங்கையிடம் உள்ள எரிபொருள் அளவு, நாட்டின் உண்மையான தேவையை விட சுமார் 10% அதிகமாகவே உள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அது கையிருப்பு இல்லாததால் அல்ல; மாறாக பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைச் சேமித்து வைப்பதாலும், விநியோகத் தற்காலிகத் தடைகளாலுமே ஏற்படும்.

அத்தியாவசியத் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்