ஈரான் தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி திடீர் சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை (25) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர்.

அத்துடன், ஈரான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!