யோஷித ராஜபக்ஷ விவகாரம்: முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அதிரடி கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த யோஷித ராஜபக்ஷவை நிறைவேற்றுப் பிரிவின் அதிகார உத்தியோகத்தராக ஆட்சேர்ப்பு செய்தமை மற்றும் அன்றைய நடைமுறைகளுக்குப் புறம்பாக அரசாங்கப் பணத்தைச் செலவழித்து பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியின் பயிற்சிப் பாடநெறியொன்றில் அவர் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை ஆகியன தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இன்று (3) முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது விசாரணை அதிகாரிகளினால் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்