TIN சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறை 2027 ஏப்ரல் 1 வரை ஒத்திவைப்பு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும் நடைமுறை, 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026 செப்டம்பர் 22 திகதியிட்ட SEC/PN/IT/2026/05 இலக்கச் சுற்றறிக்கைக்கு அமைவாக, நவம்பர் 01 முதல் குறிப்பிட்ட எட்டு (08) வகையான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்கள் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும், பொதுமக்கள் மற்றும் தனிநபர்களிடையே TIN சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகளவிலான கோரிக்கை காணப்படுவதைக் கருத்திற்கொண்டு, நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நீடிக்கப்பட்ட காலப்பகுதியில், ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள் தமது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று மற்றும் வசதியான முறைகளைத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.

அத்துடன், இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத தனிநபர்கள் இணையவழி மின்னணுச் சேவைகள் (e-Services) தளத்தைப் பயன்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் ஊக்குவிக்கிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SriLankaPolice
13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்: 2027க்குள் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை என பொலிஸ் அறிவிப்பு
NamalRajapaksa
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு: சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை
Mullaitviu
முல்லைத்தீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்கள்: இலங்கை எல்லை தாண்டி அடித்துச் செல்லப்பட்டதாகச் சந்தேகம்
NegomboPrison
கட்டுப்பாட்டை இழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டும் அதிர்ச்சித் தகவல்கள்
Trincomalee
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
CustodialDeath
பொலிஸ் தடுப்புக் காவல் மரணம்: OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!