பேஸ்புக் , வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக சம்மாந்துறை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவர் மறைந்திருக்கும் இடம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியைக் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- சம்மாந்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரி: 071 859 1162
- சம்மாந்துறை காவல் நிலையம்: 067 226 0222
