பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை கைதிகளுக்கு வழங்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்!

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், பல இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதிகள் இந்த கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி சிறைச்சாலைக்குள் இருந்து உறவினர்களுடனும் வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளுடனும் தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இந்த கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு இலஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

பூஸா சிறைச்சாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் பல கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!