கொழும்பு காலி முகத்திடல் வீதியில் உள்ள மின்சாரக் கம்பம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர் இன்று (ஜனவரி 15) காலை முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
களனி காவல்துறையினரால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மின்சாரக் கம்பத்தின் உச்சியில் ஏறியதுடன், தனது கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு உயிர்மாய்ப்பு செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.
சம்பவ இடத்திற்கு 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கி முதலுதவி வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டத்தினால் காலி முகத்திடல் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதியூடான போக்குவரத்திலும் சிறு தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
காவல்துறையினர் குறித்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்த முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
