வயலில் சடலமாக மீட்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் !

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன எனபவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் இன்று(21) காலை வயலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனது வயலுக்கு காவல் காப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவிசாளர் பிரகாத் தர்மசேன, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இன்று (21) காலை வயலுக்குச் சென்று தேடியபோது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார்.​

சடலமாக மீட்கப்பட்ட பிரகாத் தர்மசேன, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியில் போட்டியிட்டு கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளராக அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.

குறித்த தகவல் கிடைத்தவுடன், கோமரங்கடவல காவல்துறையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர், மரணத்திற்கான காரணம் குறித்து கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

​மரணத்தின் பின்னணி மற்றும் அது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரகாத் தர்மசேனவின் திடீர் மரணம், அரசியல் வட்டாரத்திலும் மற்றும் பொதுமக்களிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!