🔴 PHOTO ஓமந்தையில் புகையிரதம் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்

வவுனியா, ஓமந்தை பறநாட்டாங்கல் பகுதியில் புகையிரதப் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (02.07)  இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஏ9 வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊடாக பறநாட்டாங்கல் வீதிக்கு ஏற முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தையடுத்து குறித்த புகையிரதம் அரைமணிநேரம் தாமதமாகவே கொழும்பு நோக்கி பயணித்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!