வவுனியாவில் பாடசாலை ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஆசிரியை மீது குற்றச்சாட்டு

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு
மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

முதலாம் ஆண்டில் கற்கும் மாணவனை புல்லாங்குழல் போன்ற உபகரணத்தினால்
தலையில் தாக்கியதாக மகன் கூறியதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தலையில் காயத்துக்கு உள்ளான சிறுவன் வவுனியா பொது
வைத்தியசாலையில் இரண்டுநாள் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது திரும்பி
உள்ளார்.

இதேவேளை குறித்த ஆசிரியர் தொடர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதோடு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் ஆளுநர்
செயலகத்திற்கும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியை வவுனியா பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!