யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வருபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன், அதில் பலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றனர். அத்துடன் புகைப்படங்கள் எடுப்பது, கடலில் குளிப்பது நீச்சல் அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பலமான காற்று வீசுவதுடன், கடலும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.

ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடலுக்குள் இறங்க வேண்டாம் எனவும், கடலுக்கு மிக அண்மித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!