அகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் உயிரிழப்பு

✈️ Ahmedabad விமான விபத்து – அப்டேட்

  • ஏர் இந்தியா விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரி வளாக விடுதி மீது மோதியது.
  • குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
  • மொத்தம் 242 பேர் விமானத்தில் பயணம் செய்தனர்.
  • அவர்களில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.

242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் விழுந்து நொறுங்கியது. விபத்தை தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விமானத்தில் 169 இந்தியர்களும், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்களும், ஒரு கனடா நாட்டவரும் மற்றும் 7 பேர் போர்த்துக்கலை சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி ஆலோசனை..

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுடன் பேசி விவரங்களை கேட்டறிந்தார். விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு விஜயவாடாவில் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்து விட்டு அகமதாபாத்துக்கு விரைகிறார். இதே போல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அகமதாபாத்துக்கு விரைந்துள்ளார்.

மீட்புப் பணிகள் தீவிரம்..

ஏர் இந்தியா விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி கட்டியடத்தில் மோதியதால் அங்கிருந்த பயிற்சி மருத்துவர்களின் நிலையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் விமான பயணிகள் மட்டுமல்லாது, மருத்துவக் கல்லூரி மாணவர்களில் சிலரும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகளை, சிகிச்சைகளை துரிதமாக மெற்கொள்ள அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!