யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) முழுநேர பெண் செயற்பாட்டாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
29 வயதுடைய செ. ஜான்சிகா என்பவர், நேற்று புதன்கிழமை (11) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணைகளின் படி, ஜான்சிகா தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் விளைவாக தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை அவர் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.