கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கக்கு பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (26) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கக்கு பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.