யாழ். இந்துக் கல்லூரிக்கு எதிரான அவதூறு வீடியோ: உடனடியாக நீக்கவும், மன்னிப்புக் கேட்கவும் நீதிமன்றம் கட்டளை!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதன் அதிபர் அவர்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில், கல்லூரியிலிருந்து இந்து மதச் சின்னங்கள் அகற்றப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட காணொளியை முகநூலில் பதிவேற்றிய நபருக்கு எதிராக யாழ் இந்துக் கல்லூரி அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கை 20.08.2026 அன்று பரிசீலித்த யாழ்ப்பாணம் கெளரவ நீதிவான் நீதிமன்றம், மேற்படி காணொளியை உடனடியாக அகற்றுவதுடன், காணொளி வாயிலாக மன்னிப்புக் கோர வேண்டும் என்ற நிபந்தனையுடனான கட்டளை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

அத்தோடு குறித்த போலி தகவலை பரப்பிய நபரின் வீடியோவை பதிவிட்டிருந்த இணைய ஊடகம் ஒன்றிற்கும் அந்த வீடியோவை நீக்குமாறு கௌரவ நீதவானால் கட்டளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கௌரவ மேலதிக நீதிவானால் எதிர்மனுதாரருக்கு அறிவித்தல் அனுப்புமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த தவணை 03.09.2026 அன்று நடைபெறவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்