சுவிஸில் இலங்கை தமிழ் பெண்ணை கொலை: நீதிமன்றம் விதித்த தண்டனை

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

திட்டமிட்ட வகையில் மனைவியை கொலையை செய்த கணவனுக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனையும் சகோதரனுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த வருடம் செப்டம்பர் 11ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தின் டிசினோ பகுதியில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி, மர்மமான முறையில் உயிரிழந்தார்.

குற்றவாளிகள் இணைந்து கொலை செய்த நிலையில், இயற்கையான மரணம் என நாடகமாடியதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட தமிழ் பெண் உறங்கிக் கொண்டிருந்த போது, கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து அவர் மீது பாய்ந்துள்ளனர்.

பெண்ணின் தலையில் பிளாஸ்டிக் பையை மாட்டி, சுமார் 10 நிமிடங்கள் மூச்சுத் திணறச் செய்து அவரைக் கொலை செய்துள்ளனர்.

பின்னர், அவர் தூக்கத்திலேயே இயற்கையாக இறந்தது போல் காட்டுவதற்காக உடலை நகர்த்தி வைத்துள்ளனர்.

இந்த நாடகத்தை ஒஸ்கார் விருதுக்கு தகுதியானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!