பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் அரசியல், கலாச்சார மாநாடு!

இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய ஃபோரம், வரும் மாசி 2026-இல் “ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு” எனும் தலைப்பில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு, தமிழ் தேசியக் கொள்கையில் ஈடுபாடுள்ள புலம்பெயர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், கலை பண்பாட்டு குழுக்கள், மற்றும் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு தளத்திற்கு அழைத்து வருவதாகும்.

முக்கிய நோக்கங்கள்:

  1. தமிழ் தேசிய அரசியல் உரையாடல்

ஈழத் தமிழர்களின் நிரந்தர தீர்வுக்கான வழிகளை ஆராயும் ஒரு திறந்த உரையாடல் களமாக இந்த மாநாடு அமையும்.

  1. பண்பாட்டு அடையாளங்களின் பாதுகாப்பு

இனவழிப்புக்குள்ளான தமிழர் சமூகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பேணும், சமூகவாழ்வை வலுப்படுத்தும் வகையில் செயல்முறை முன்மொழிவுகளை முன்வைக்கும்.

  1. பொதுத் தொனிப்பொலியுடன் தீர்வு தேடல்

தனிப்பட்ட, குழு சார்ந்த விருப்பு-வெறுப்புகளைவிட மேலாக, தமிழர் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

  1. அமைப்புக் கோட்பாடு

இம்மாநாட்டின் ஏற்பாடுகளை பிரித்தானியாவில் இயங்கும் தமிழரசு கட்சியின் ஃபோரம் முன்னெடுத்துள்ளது. ஆனால், சமீபமாக, மூடிய அறையில் தமிழரசுக் கட்சி ஆதரவு குழு என சில குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

05.எவ்வாறாயினும், எங்கள் நிலைப்பாடு தெளிவானது

சமூகத்தின் நலனுக்காக செயல்படும் அனைவரையும் இணைத்து, பொது முயற்சியுடன் தமிழ் தேசிய கட்டமைப்பை பாதுகாப்பதற்கே தமிழரசு கட்சி பிரித்தானிய ஃபோரம் நிச்சயமாக அர்ப்பணிப்புடன் செயற்படும்.

06.சமூகப் பாதுகாப்பு அரசியல் விழிப்புணர்வு – பண்பாட்டு பேணல்

இம்மாநாடு, ஒரு நிகழ்வாக மட்டுமல்ல – அது புதிய தமிழ் அரசியல் எழுச்சிக்கான துருவ நட்சத்திரமாக அமையும். உங்கள் பங்களிப்பும், உங்கள் சிந்தனைகளும், உங்கள் செயற்பாடுகளும் அதற்குத் தேவையானவை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஃபோரம் வேண்டி நிற்கிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!