முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஓவல் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் போலியான காணொளி, 2016 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவிற்கும் ட்ரம்பிற்கும் இடையே நடந்த, ஓவல் அலுவலக சந்திப்பில், கையாளப்பட்ட காட்சிகளாகத் தெரிவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

2016 தேர்தலின் போது ட்ரம்பின் பிரசாரத்திற்கு ஒபாமா தீங்கு விளைவிக்க முயன்றதாக, ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஓவல் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்படுவதாகக் காட்டும் போலி காணொளியை ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இந்த குறுகிய காணொளி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டு, டிக்டோக்கில் பதிவேற்றப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரம்பின் உத்தியோகபூர்வ சமூகக் கணக்கில் மீண்டும் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.
JUST IN — President Trump posts a TT video that features a brutal compilation of Democrats stating, “No one is above the law,” and ends with President Barack Obama being arrested and thrown in prison. pic.twitter.com/B4Ij3xp6hG
— RedWave Press (@RedWave_Press) July 20, 2025
இந்த போலி காணொளி, கு.டீ.ஐ. முகவர்கள் ட்ரம்பும் ஒபாமாவும் நடத்துகின்ற சந்திப்பின் இடையில் நுழைந்து, ஒபாமாவை மண்டியிடும் நிலைக்குத் தள்ளி, கைவிலங்குகளை மாட்டுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதனைப் பார்த்து ட்ரம்ப் சிரிப்பது போன்றும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
காணொளியின் ஆரம்பத்தில் ஒபாமா மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோ.பைடன் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல” என்று கூறும் உண்மையான காட்சிகளின் தொகுப்பு காட்டப்பட்டுள்ளது.