யாழில் பெண் விரிவுரையாளரான வைத்தியர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் காட்டு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன யுவதியும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் விரிவுரையாளரின் காதலன் என கூறப்படும் இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விரிவுரையாளரை கொலை செய்து , சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக கூறியுள்ளார்.

அதனடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் விரிவுரையாளரின் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்