இலங்கை கடற்பரப்பில் கடற்படையினர் கைப்பற்றிய பெருந்தொகை தங்கம்!

கல்பிட்டி களப்பு அரிச்சல் கடல் பகுதியில் நூதனமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 4.454 கிலோகிராம் தங்கத்தை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்றைதியதினம்(01) மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற டிங்கி படகுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின்படி, கல்பிட்டி களப்பில் கடற்படை கப்பல் விஜய நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான குறித்த டிங்கி படகு சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதன்போது, டிங்கி படகின் மீன்பிடி வலையில் இணைக்கப்பட்டிருந்த பதின்மூன்று சந்தேகத்திற்கிடமான ஈய எடைகள் கண்டறிப்பட்டுள்ளது.

பின்னர் அவற்றை சோதனை செய்ததில் சந்தேக நபர்களால் நுட்பமான முறையில் தயாரிக்கப்பட்டு ஈய எடைகளாக மறைத்து சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களையும் தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!