யாழ்ப்பாணம் – மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப கட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 20ஆம் திகதி அங்கு T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்த தகவல் உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, ரவைகளை மீட்க அனுமதி கோரினர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்பேரில், இன்று (22) காலை விசேட அதிரடிப் படையினரின் பங்களிப்புடன் அந்த ரவைகள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
