🔴 VIDEO திருகோணமலை மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்றைய தினம் (25) திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கையினை பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் அவர்களது திருகோணமலை விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக யுபிலி மண்டபத்தின் முன்பாக காலை 8.00 மணியளவில் பாதிக்கப்பட்ட சமூகங்கள், குடிமைப் பூர்வ அமைப்புகள், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!