இலங்கையின் பிரதான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (24) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சம்பத் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 317.75 ரூபாயாக உயர்வடைந்துள்ளதுடன், மக்கள் வங்கியில் அதன் விற்பனை விலை 317.23 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, NDB வங்கியில் டொலரின் விற்பனை விலை 317 ரூபாயாகவும், செலான் வங்கியில் 316.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக வர்த்தக வங்கிகளில் டொலரின் கொள்வனவு விலை 309 ரூபாய் முதல் 311 ரூபாய் வரையான மட்டத்திலும், விற்பனை விலை 316 ரூபாய் முதல் 318 ரூபாய் வரையான மட்டத்திலும் இன்றைய தினம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
