போர் நிறுத்த பின்னணியில் சீனா – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில், இந்த போர் நிறுத்த முடிவை வரவேற்பதாக இன்று புதன்கிழமை தெரிவித்த சீன வெளி விவகார அமைச்சகம், மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை நிலைநாட்ட சீனா தனது தரப்பிலிருந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளது.

சர்வதேச மோதல்களை அரசியல் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்பதையே சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அந்நாட்டின் வெளி விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த போர் நிறுத்தத்தை உறுதி செய்ய சீனா எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகள் அல்லது முன்னெடுத்த முயற்சிகள் குறித்த விரிவான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் பிராந்திய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!