அண்டை நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஈரான் ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் பிராந்திய நாடுகளிடம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரான் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிச் செய்தி ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் தனது நாட்டுக்கு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட பிராந்திய ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் அண்டை நாடுகளிலிருந்து முன்னெடுக்கப்படாவிட்டால், தனது நாடும் பிராந்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“இனிமேல், அண்டை நாடுகள் முதலில் தாக்காத வரை அவை மீது தாக்குதல் நடத்த வேண்டாம்” என ஈரானின் இடைக்காலத் தலைமை தீர்மானித்துள்ளதாகவும் பெசெஷ்கியான் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!