காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை இன்று மீண்டும் ஆரம்பம்!

பருவகால மழை மற்றும் பராமரிப்பு மணிபளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச்சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது.

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கி புறப்பட்டது. அது மதியம் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தினை வந்தடைந்தது.

பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.

ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையினை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வாரத்தில் செவ்வாய் தவிர்ந்த 6 நாட்களும் சேவை இடம்பெறும் இருவழிக்கட்டணமாக 28500 இலங்கை ரூபாய் அறவிடப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!