🔴 PHOTO கரடியனாறு பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள – கரடியனாறு இந்து வித்தியாலய பாடசாலையில் பாடசாலையால் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 14 மாணவர்கள்  மேலதிக சிகிற்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பாடசாலையால் உணவு ஒப்பந்தக்காரர் மூலம்  மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை உற்கொண்ட  மாணவர்களில் 22 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரடியனாறு  இந்து வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான  மாணவர்களில்
வாந்திபேதி , வயிற்றுவலி என்பன ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் உணவு ஒப்பந்தக்காரர் கைது செய்யப்படு நீதி மன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!