யாழில் கொலையில் முடிந்த கைகலப்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் நேற்று (22) இரவு வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி, கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று இரவு இரு மீனவர்களுக்கிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

கைகலப்பு முற்றியதில் இருவருக்கும் இடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்டவர் மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!