தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து விபத்திற்குள்ளானபோது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பல மாணவர்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டோர் அதில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வழிவிட முயன்றபோதே பேருந்து விபத்திற்குள்ளானதாக தலாவ பேருந்து விபத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து மிகக் குறுகிய சாலையில் பயணித்ததாகவும், இதன்போதே மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்று விபத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
