முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவு நாள்: லண்டனில் பாராளுமன்றம் முன்பாக ஒலித்த நீதிக்கான குரல்!

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 18ஆம் திகதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் உணர்வெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.

இதன் முக்கிய நிகழ்வாக, பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் தமக்கான நீதியை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தி, லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய இராச்சியம் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!