முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் சுமார் 300 சட்டத்தரணிகள் முன்னிலையாக உள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தினுள் ஏராளமான சட்டத்தரணிகள் கூடியுள்ளனர்.

அத்துடன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து வழக்கறிஞர் குழுக்களும், மேல் மாகாண அமைப்பாளர்களும் நீதிமன்றத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுமக்கள் அமைதியைப் பேணும் நோக்கில், இன்று (26) கோட்டை நீதிமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.