பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே அதிகளவில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை நிலையில் உள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி கிரேண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனித் தெரு, அங்குலானை, வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஹிக்கடுவ உள்ளிட்ட பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகக்கூடியவர்கள் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகள், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடிய அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

சக நண்பர்களின் தூண்டுதல் பாடசாலை மாணவர்களின் போதைப்பொருள் பாவனையில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!