மாமனாரின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்காகி மருமகன் உயிரிழப்பு!

தெரணியகல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உடமாலிபொட பிரதேசத்தில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் மாலிபொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றியதன் விளைவாக மாமனார் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்காக தெரணியகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sagara Kariyavasam
பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு
Hikkaduwa Footwear
மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!
easter attack
உயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
srilanka weather
வானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
basil rajapaksa
வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
Ananda Wijepala
சாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!