🔴 VIDEO வெளிநாடொன்றில் செல்ஃபியால் கைதான இலங்கை பெண்!

புயலில் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அதே நேரத்தில் சிறுவன் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்த முயன்றதாகவும் கூறி, இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவரையும் ஹொங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு பெண்களின் அந்த சிறுவனின் தாய் இந்திய நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சீனாவை நோக்கி நகரும் ‘ ராகசா’ புயல், ஹொங்கொங்கை இந்த நாட்களில் பாதித்துள்ளது.

இதன் விளைவாக, குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், கடலோரப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் அந்நாட்டின் அனரத்த்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புயல் அலைகள் மிகவும் ஆபத்தானவை என்றும், எச்சரிக்கை இல்லாமல் தாக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய், தனது பிள்ளையுடன் புயலின் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தார்.

செல்ஃபியை தாயின் தோழியான இலங்கைப் பெண் எடுத்தார்.

அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு அலை அவர்கள் மூவரையும் இழுத்துச் சென்ற நிலையில், மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், எச்சரிக்கை சமிக்ஞைகள் இருந்தபோதிலும், அவர்களது 05 வயது பிள்ளையை ஆபத்தில் ஆழ்த்தி இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக இரண்டு பெண்களையும் ஹொங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அருகில் இருந்த ஒருவர் அவர்கள் புகைப்படம் எடுத்த தருணத்தையும், பின்னர் அவர்கள் அடித்துச் செல்லப்பட்ட விதத்தையும் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

பல மீட்டர் உயரமுள்ள ஒரு பயங்கரமான அலை ஒரே நேரத்தில் திடீரென வந்து மூவரையும் அடித்துச் செல்வதை இது காட்டுகிறது.

‘ ராகசா’ புயல் இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான புயலாக கருதப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!