🔴 PHOTO செம்மணி மனித புதைகுழிக்கு ஆதரவு வழங்கும் முகமாக தீப்பந்தம் ஏந்திய போராட்டம்!

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் திங்கட்கிழமை (23) மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர் பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு வருகின்ற போது இடையில் இடம்பெற்ற இவ்வாறான மனித புதைகுழிகள், இனப்படுபவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியினை பெற்று தர வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!