கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!

மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர, வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் காப்பாற்ற முயன்றபோது, திங்கட்கிழமை (25) அன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

படல்கும்பூர, அலுபொத்த, பிலிமல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான என்.எம்.எம். நுஜூம் (56 வயது) என்ற கணித ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் சில ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுடன் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தபோது, மாலை 4.30 மணியளவில் கிரிந்த (Kirinda) கடற்கரைக்குச் சென்று கடலில் நீராடியுள்ளனர்.

அதன்போது, ஒரு மாணவி கடல் அலையினுள் சிக்கி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆசிரியர், மாணவியை காப்பாற்றச் சென்ற தருணத்தில் இருவருமே நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, உயிர்காக்கும் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் இணைந்து அவர்கள் இருவரையும் மீட்டு, தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் சிகிச்சை பலனின்றி ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்