🔴 PHOTO முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்…! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை

இராணுவ முகாமிற்கு வருமாறு  கூறிவிட்டு தாக்குதல் நடாத்தியதில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்  தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவினரால்  அறிக்கை ஒன்று இன்றையதினம் (11.08.2025) வெளியிடப்பட்டுள்ளது.

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த  பகுதி இளைஞர் ஒருவருக்கு  ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து   07.08.2025 அன்று இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதனையடுத்து  இராணுவமுகாமிற்கு இரவு ஐவர் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளனர். அதனால் என்ன  செய்வதென்று தெரியாது  இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர்  தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில்  ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவரின் இறப்பு தாெடர்பில்  பல சந்தேகங்கள் இருக்கும் நிலையில்  குறித்த குடும்பஸ்தரின் இறப்பு தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவினால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

07.08.2025 ஆந் திகதின்று, முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட, ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12வது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

இதன் போது, 07.08.2025 ஆந் திகதியன்று இரவு வேளையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்லதற்காக அதன் முகாம் வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த 5 பேரை விரட்டியடிப்பதற்காக முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

 அதில் தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் முத்தையன்கட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய பொலிஸ் விஷேட குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேற்படி நபர்கள் முகாம் வளாகத்தினுள் நுழைந்தபோது, முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் அவர்களைக் கண்டு விரட்டியடிக்க முற்பட்ட போது, இதன் விளைவாக, உள்ளே நுழைந்தவர்கள் தாக்கப்பட்டது தெரியவந்ததன் காரணமாக சிப்பாய் ஒருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், முகாமுக்குள் நுழைந்து திருட்டுச் சம்பவத்தை மேற்கொள்வதற்காக இக் குழுவிற்கு உதவிய மேலும் இரண்டு சிப்பாய்களும் ஒட்டுச்சுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களை 09.08.2025 திகதியன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், மூன்று சந்தேக நபர்களும் 19.08.2025 ஆந் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் எந்தவித செல்வாக்கும் இல்லாமல், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒட்டுச்சுட்டான் பொலிசார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இணைந்து அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாலநாதன் சதீசன் 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!