வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் தீ பற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (30) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சாமி அறையில் விளக்கு
ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயினை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெற்றோலினை பயன்படுத்தியமையாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த வீட்டார் இது தொடர்பாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பகுதியினர் பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.